காற்று சூரிய ஒளி உள்ளே வரும் வகையில் கட்டடங்களைக் கட்ட வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு
இயற்கையாகக் காற்று வந்து செல்லும் வகையிலும், சூரிய ஒளி உள்ளே வரும் வகையிலும் புதிய கட்டடங்களை வடிவமைக்க வேண்டும் என்பதைக் கொரோனா சூழல் உணர்த்தியுள்ளதாகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 7 கோடியே 67 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரியஒளி மின் திட்டத்தை வெங்கைய நாயுடு தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அரசு கட்டடங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்திக் கருவிகளைப் பொருத்தவும், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
காற்றுக்கும், சூரிய ஒளிக்கும் இயற்கையாகவே நோயைக் குணப்படுத்தும் தன்மையுள்ளதாகத் தெரிவித்தார். சூரிய ஒளியும் காற்றும் இயற்கையாக உள்ளே வரும் வகையில் நமது பாரம்பரியக் கட்டடங்கள் இருந்ததாகவும், நடுவில் மறந்து விட்ட அந்தப் பாரம்பரியத்தை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்றும் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.
Comments