கடன் கொடுத்த நபர், வாட்சப்பில் அவதூறு பரப்பியதால் ஓட்டுநர் தற்கொலை

0 2238

திருவாரூர் அருகே தன்னைப் பற்றி அவதூறாக வாட்சப்பில் செய்தி பரப்பியதால் மனமுடைந்த ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற அந்த இளைஞர் அவசரத் தேவைக்காக திருவாரூரைச் சேர்ந்த முத்தையா என்பவரிடம் தனது 2 பைக்குகளை அடமானம் வைத்து ஒரு லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

மாதம் தவறாமல் சதீஷ்குமார் வட்டி செலுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையிலும் அவரது பைக்குகளை முத்தையா விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சதீஷ்குமார் கேள்வி எழுப்பிய நிலையில், அடியாட்களுடன் வந்த முத்தையா வீட்டிலிருந்தவர்களை ஆபாசமாகப் பேசி தாக்கிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

சதீஷ் தரப்பில் போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அவரது புகைப்படத்தை சமூக வலைதலங்களில் பதிவேற்றி, "பைக் திருடன்" என்றும் "திருட்டு பைக்குகளை அடமானம் வாங்குகிறான்" என்றும் முத்தையா அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments