லாஸ் ஏஞ்சலஸ் மலை பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ

0 2216

அமெரிக்காவின் தெற்கு காலிஃபோர்னியாவில் உள்ள மலை பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மலை பகுதியில் ஏற்பட்ட தீ, முதலில் 5 ஏக்கர் பரப்பில் ஆரம்பித்து, மளமளவென பரவி, சில மணி நேரத்தில் சுமார் 400 ஏக்கருக்கு மேல் பரவியதாக கூறப்படுகிறது.

விமானம் மூலம் தீயணைக்கும் ரசாயனத்தை தூவி தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

அந்த பகுதி வழியாக செல்லும் Golden State 5 பிரதான விரைவு நெடுஞ்சாலையின் இருபுறத்தையும் தீ சூழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments