நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!
சேலத்தில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர் அருகே உள்ள கூழையூரை சேர்ந்த தனுஷ், கடந்த 2019-ல் 12-ம் வகுப்பு முடித்து, ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ், நள்ளிரவில் தனியாக அறையில் படித்துக் கொண்டிருந்துள்ளான். அதிகாலையில் அவரது தாயார் எழுந்து பார்த்த போது, தனுஷ் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளான்.
மூன்றாவது முறையும் தோல்வியடைந்து விட்டால் தனது மருத்துவர் கனவு தகர்ந்துவிடும் என நண்பர்களிடம் தனுஷ் கூறியதாக சொல்லப்படும் நிலையில், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Comments