ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகை விடவும் விற்பனை செய்யவும் ரெயில்வே அமைச்சகம் முடிவு

0 3541

ரெயில் பெட்டிகளை தனியாருக்கு விற்பனை செய்யவும், குத்தகைக்கு விடவும் ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கலாசாரம், மதம் மற்றும் சுற்றுலா வகைக்கு ரெயில்களை தனியார் துறையினர் இயக்க ரெயில்வே துறை அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான கொள்கையையும், திட்டத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முடிவு செய்வதற்கு செயல் இயக்குனர் அளவிலான உயர்மட்டக்குழுவை ரெயில்வே அமைத்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் செயல்பட விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 16 ரெயில்பெட்டிகளை வாங்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு அல்லது விலைக்கு வாங்குகிறவர்கள், கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments