சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி குறைப்பு.. சில்லரை வர்த்தகத்தில் லிட்டருக்கு ரூ.5 வரை விலை குறைய வாய்ப்பு..!
பண்டிகைக் காலங்களை கருத்தில் கொண்டு பாமாயில், சோயாபீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய்க்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
பாமாயிலுக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 2 புள்ளி 5 சதவீதமாகவும், சோயா பீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 7 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 2 புள்ளி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ஆயிரத்து நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். சில்லரை விலையில் லிட்டருக்கு 4 அல்லது 5 ரூபாய் விலை குறையும். சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
Comments