10, 11-ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் ஆல்-பாஸ் ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளைத் தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பிதிருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம், தனித்தேர்வர்களுக்கான 10-ம் மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்நிலையில், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விண்ணப்பித்திருந்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
Comments