இஸ்ரேல் சிறையில் இருந்து 6 பாலஸ்தீனப் போராளிகள் தப்பி ஓட்டம் ; இருவர் கைது

0 2291
இஸ்ரேல் சிறையில் இருந்து 6 பாலஸ்தீனப் போராளிகள் தப்பி ஓட்டம்


இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பி சென்ற 6 பாலஸ்தீனப் போராளிகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த கில்போவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 6 பாலஸ்தீனப் போராளிகள் கழிவறையில் பள்ளம் தோண்டி தப்பி சென்றனர்.

அவர்களை கதாநாயகர்களாகப் பாலஸ்தீனத்தில் கொணடாடப்பட்டு வந்த நிலையில், நாசரேத் நகரில் பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் பதுங்கியிருந்த 2 போராளிகளை போலீசார் கைது செய்தனர்.

அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேல் நோக்கி ராக்கெட் ஏவுகனை வீசினர். தற்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த மேலும் 2 போராளிகளை போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments