இந்திய - ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

0 2082
இந்திய - ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள் ஆகியன தொடர்பாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆஸ்திரேலியப் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் தத்தன், வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் ஆகியோர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பேச்சு நடத்தினர். இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் அமைதி, வளர்ச்சி, தடையற்ற வணிகம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் உள்ள பங்கு பற்றிப் பேசப்பட்டது.

கொரோனா சூழலிலும் ஆஸ்திரேலியக் குழுவினர் இந்தியாவுக்கு வந்துள்ளது இருநாடுகளிடையே உள்ள வலிமையான உறவைக் காட்டும் வகையில் உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments