கடல் அலையில் சிக்கிய மகனை காப்பாற்றி விட்டு உயிரிழந்த தந்தை ; விநாயகர் சிலையை கரைக்கும் போது நேர்ந்த சோகம்

0 3392
கடல் அலையில் சிக்கிய மகனை காப்பாற்றி விட்டு உயிரிழந்த தந்தை

சென்னையில் கடல் அலையில் சிக்கிய மகனை காப்பாற்றி விட்டு தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலையை கரைக்க குழந்தைகளுடன் பாலவாக்கம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.

சிலையை கரைக்கும் பொழுது கடல் அலை அவரது மகனை இழுத்துச் சென்றது. இதனால் பதறிப்போன சுரேஷ் உடனடியாக விரைந்து செயல்பட்டு மகனை மீட்டு கரை சேர்த்தார். ஆனால் அதற்குள் அவரை மற்றொரு அலை இழுத்துச் சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments