டரொங்கா விலங்குகள் பூங்காவில் பிறந்த இரு பில்பை குட்டிகள் ; புதிய குட்டிகளை இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்த வாய்ப்பு
ஆஸ்திரேலியாவில்,அழிந்து வரும் உயிரின பட்டியலில் உள்ள பில்பை ஜோயை விலங்கிற்கு இரண்டு குட்டிகள் பிறந்துள்ளன. சிட்னியின் டரொங்கா விலங்குகள் பூங்காவில் பிறந்த இந்த குட்டிகளை இனப்பெருக்க திட்டத்திற்கு பயன்படுத்த அல்லது வனத்தில் விட பூங்கா அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நீண்ட காதுகள் மற்றும் வலுவான பின்னங்கால்களுடன் முயல் போன்று தோற்றமளிக்கும் அழிந்து வரும் பில்பைக்கள், சுமார் 15 மில்லியன் ஆண்டுகள் முதல் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதாகவும், ஒரு காலகட்டதில் அவை ஆஸ்திரேலியாவின் 70 சதவீத பகுதிகளில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Comments