பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

0 3227

காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், மகாகவி பாரதியார் பெயரில் தமிழ் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர், பாரதியின் பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

 இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, உலகின் மிக மூத்த மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார். சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், அவரது பெயரில் தமிழுக்கான ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும் என மோடி அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments