அர்ச்சகர், பட்டாச்சாரியர் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை திட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

0 3149

அரசின் திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்று விடாமல், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை மாதந்தோறும் தாமே கண்காணித்து ஆய்வு செய்யவுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 12,959 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு திமுக சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.

 முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் செயல்படுத்தப்படுவதாகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு-வை செயல் பாபு என்று தான் அழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments