மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

0 2413

மகாகவி நாளை முன்னிட்டு, பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி, இந்த ஆண்டு முதல் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் பாரதி சிலையின் கீழ் அவரது திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., மற்றும் எம்எல்ஏக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY