இந்திய விமானப்படைக்கு 6 ஜெட் விமானங்களில் ராடார் கண்காணிப்பு... ரூ 11,000 கோடி ஒப்பந்தம்
இந்திய விமானப் படை 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்துடன் வானில் கண்களைப் பொருத்த உள்ளது.
DRDO வால் இந்தியாவின் ஏ 321 ஜெட் விமானங்கள் ராடார் கருவிகள் பொருத்தப்பட்டு வான்பரப்பை கண்காணிக்கப் பயன்படுத்தப்பட உள்ளன.எதிரியின் போர் விமானங்கள், டிரோன்களை இவை தடுத்து நிறுத்தவும் பயன்படும். இத்தகைய 6 விமானங்களை இந்திய விமானப் படை பெற உள்ளது.
இதற்கான ஒப்புதலை பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த வியாழக்கிழமை வழங்கியது. தற்போது பயன்படுத்தும் நேத்ரா ஜெட் விமானங்களை விடவும் இவற்றின் ஆற்றல் பலமடங்காகும்.
Comments