அலகின் மேற்பகுதியை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத கிளி.!
நியூஸிலாந்தில் மேல் தாடையை இழந்த கிளி ஒன்று நாக்கு மற்றும் கூழாங்கற்களைப் பயன்படுத்தி தனது தேவைகளைப் பூர்த்தி செய்வது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வில்லோபேங்க் என்ற வனஉயிரின சரணாலயத்தில் ப்ரூஸ் என அழைக்கப்படும் கியா வகையைச் சேர்ந்த கிளி வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் அலகின் மேற்பகுதி விபத்து ஒன்றில் துண்டிக்கப்பட்டது.
ஆனால் அதைப் பற்றி கவலை கொள்ளாத ப்ரூஸ், தனது நாக்கை பயன்படுத்தி அதன்மூலம் சிறு சிறு கூழாங்கற்களை எடுத்து தனது உடலைச் சொறிந்து கொள்வதற்கும், உணவை எடுத்துக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்கிறது.
Comments