புற்றீசல் போல வானில் ஏவப்படும் டிரோன் விமானங்கள்... எதிர்கால போர் உத்திகளுக்குத் தயாராகும் விமானப்படை
புற்றீசல்கள் போல டிரோன் படைகள் மூலம் எதிரியைத் தாக்கி அழிப்பதற்கான திட்டத்தை பாதுகாப்பு படையினர் தயாரித்துள்ளனர்.
எதிர்காலப் போர்களில் இது ஒரு புதிய உத்தியாக செயல்பட உள்ளது. சிறிய பொம்மை குவாட் ஹெலிகாப்டர்கள் போல இவை வயல்களின் மீது பறக்கும். தனது எலக்ட்ராணிக் கண்களால் தரையை ஸ்கேன் செய்யும். தாக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அதிலிருந்து குண்டுகளை அது குறிப்பிட்ட இலக்குகள் மீது வீசும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செகந்திராபாத்தில் இதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.
ஆயுதம் தாங்கிய 50 டிரோன்கள் 25 கிலோமீட்டர் தூரம் வரை தாக்குதலுக்கு பயன்படுத்துவதற்கான ஒத்திகை நடைபெற்றது.100 கிலோ மீட்டர் வரை செல்லக் கூடிய டிரோன்களைத் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களிடமிருந்து குறைந்தது 100 டிரோன்களை வாங்கவும் வாய்ப்புள்ளது.
Comments