புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. தேர்தல் அக்.4ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ராஜ்யசபா எம்.பியான அதிமுகவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் அக்டோபர் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதைத்தொடர்ந்து புதிய ராஜ்யசபா எம்பியை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அங்கு என்ஆர்.காங்கிரசுக்கு 10, பாஜகவுக்கு 6 என எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதால், என்ஆர் - பாஜக கூட்டணிக்கு அதிக வாக்குகள் உள்ளன.
எதிர்கட்சியான திமுகவுக்கு 6, காங்கிரசுக்கு 2, சுயேட்சைகள் 3 என மொத்தம் 11 எம்எல்ஏக்ககள் உள்ளனர். நியமன எம்எல்ஏக்களுக்கு மேல்சபை எம்பி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற நிலையில், ராஜ்யசபா பதவியை பெற பாஜக, என்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முயற்சிக்கின்றன. இதில் வெல்வது யார் என்பது விரைவில் தெரியவரும் என கூறப்படுகின்றது.
Comments