சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள ஆலையை வேறு ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்க போர்டு திட்டம்..?

0 16631
சென்னையை அடுத்த மறைமலை நகரில் சுமார் 320 ஏக்கர் பரப்பில் உள்ள தொழிற்சாலையை, வேறு ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு போர்டு இந்தியா விற்பனை செய்ய உள்ளதாக தமிழக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னையை அடுத்த மறைமலை நகரில் சுமார் 320 ஏக்கர் பரப்பில்  உள்ள தொழிற்சாலையை, வேறு ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு போர்டு  இந்தியா விற்பனை செய்ய உள்ளதாக தமிழக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஃபோர்டு வெளியேறிய பிறகு, அங்கு வேறு ஒரு நிறுவனம் கார் உற்பத்தியை தொடரும் பட்சத்தில், பணியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு உருவாகும் என்றும் தமிழக தொழில்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனவே இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோர்டு EcoSport, Ford endeavour ஆகிய மாடல்கள் தமிழகத்தில் உள்ள மறைமலை நகர் ஆலையில் தயாராகின்றன.

குஜராத் மாநிலத்திலுள்ள ஆலையிலிருந்து fiago மாடல் கார் உற்பத்தியாகிறது. ஃபோர்டு இந்தியா நிறுவன கார்கள் சந்தையில் போதிய அளவில் விற்பனை ஆகாததால் அந்நிறுவனம் உற்பத்தியை  நிறுத்துவதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments