மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரிடம், டெல்லி போலீசார் விசாரணை
மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் வழக்கில் டெல்லியில் கைதான 4 பேரை சென்னை அழைத்து வந்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திகார் சிறையில் இருந்தபடி தொழிலதிபர் மனைவியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணமோசடி செய்த வழக்கில் டெல்லி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஈசிஆர் பண்ணை வீட்டில் கைப்பற்றப்பட்ட சொகுசு கார்களை வாங்கி கொடுத்த தரகர் அருண் முத்து, பண்ணை வீட்டை வாங்குவதற்கு உதவிய கமலேஷ் கோத்தாரி, சுகாஷின் வழக்கறிஞர் மோகன்ராஜ், லீனா மரியாபாலின் மேலாளர் சாமுவேல் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
4 பேரையும் டெல்லி வரவழைத்து விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீசார் அவர்களை மீண்டும் சென்னை கொண்டு வந்து மாம்பலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடியின் பின்னணியில் சென்னையை சேர்ந்த மேலும் சிலர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
Comments