சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் புகை அலாரம்... 2025 ஆம் ஆண்டில் தனி விண்வெளி நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்

0 5503

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவின் பிரிவில் திடீரென புகை அலாரம் ஒலித்தது .

விண்வெளி வீரர்கள் திட்டமிட்ட விண்வெளி நடைப்பயணத்திற்கு முன்னால் "எரியும்" வாசனை அங்கிருந்தவர்களை சிறிது நேரம் திகைக்க வைத்தது. பில்டர் கருவிகள் மூலம் புகையை கட்டுப்படுத்திய விண்வெளி வீரர்கள் பின்னர் உறங்கப் போயினர். அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்த புதிய பிரச்சினை ஏற்பட்டது.

பின்னர் திட்டமிட்டபடி ரஷ்ய விண்வெளி வீரர்கள் விண்ணில் நடைபயணம் மேற்கொண்டனர்.
கடந்த ஜூலை மாதத்தில், மென்பொருள் செயலிழப்பு விண்வெளி நிலையத்தை பாதித்தது.

அது ஒரு குறுகிய காலத்திற்கு கட்டுப்பாட்டை இழந்தது .அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளால் 2025 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு விலகி தனி விண்வெளி நிலையத்தை அமைக்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments