3 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் திரண்ட மக்கள்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பொது மக்கள் குவிந்தனர்.
தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையான நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பிய மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்தனர்.
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏறக்குறைய ஆயிரத்து 100 பேருந்து இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மதுரை, மயிலாடுதுறை, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு முன்பதிவில்லாத பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதாகப் பயணிகள் தெரிவித்தனர்.
Comments