ஐ-கிளவுட், ஐ-மெசேஜ் தரவுகளை ஸ்கேன் செய்ய உள்ளதாக வெளியான ஆப்பிள் நிறுவன அறிவிப்புக்கு கண்டனம்

0 2615
ஆப்பிள் தனிநபர்&அடிப்படை உரிமையில் தலையிடுவதாக கண்டனம்

 IPhoneல் , ஐ-கிளவுட் மற்றும் ஐ-மெசேஜில் வரும் குழந்தைகள் மீதான பாலியல் மீறல்கள் ஆகியன தொடர்பாக பதிவுகளை ஸ்கேன் செய்ய உள்ளதாக வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்புக்கு அரசு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது.

இது தனிநபர் உரிமையை மீறும் அப்பட்டமான செயல் என்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐ போனை பயன்படுத்துவோர் ஒட்டுமொத்தமாக உளவுபார்க்கப்படலாம் என் அரசு தரப்பில் எதிர்ப்பு உருவானதால் தள்ளிவைக்கப்பட்ட இந்த நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் மீண்டும் கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஸ்கேனிங் செய்வது பற்றி தனது அப்டேட் ஒன்றில் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆனால் இப்படி செய்ய ஆப்பிள் நிறுவனத்திற்கு உரிமை இல்லை எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்போது ஆப்பிள் அறிவித்துள்ள அப்டேட்டின்படி,ஐ-கிளவுட்-ல் குழந்தை பாலியல் தொடர்பான பதிவுகள் தானாகவே அடையாளங்குறிக்கப்பட்டு அது குறித்த தகவல் ஆப்பிள் நிறுவனத்திற்கு சென்று விடும். மொபைலில் பேரன்டல் கன்ட்ரோல் ஆன் செய்யப்பட்டு இருந்தால் மட்டும் இது போன்ற பதிவுகள் ஐ-மெசேஜில் பகிரப்படும். இந்த நடைமுறை என்ட் டு என்ட் என்கிரிப்ஷனில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments