விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தையில் திரண்ட மக்கள் ; கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டதால் கொரோனா பரவும் என அச்சம்
மும்பையில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.மராட்டியத்தில் கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்து வருகிறது. இதனை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
எனினும், விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வீட்டிலேயே வழிபாடு செய்யும் படியும், மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படியும் சிவசேனா அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் மும்பை நகரில் தாதர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் மக்கள் பொருட்களை வாங்க நேற்று அதிக அளவில் குவிந்தனர்.
சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் ஆகியவற்றை முறையாக பின்பற்றாமல் இருந்ததால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் அச்சம் அதிகரித்து காணப்படுகிறது.
Comments