விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மும்பையில் 10 நாட்களுக்கு 144 தடை
மும்பையில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்துள்ள காவல்துறை, நள்ளிரவு முதல் 10 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா சூழலில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்குப் புனே காவல்துறை ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில் மும்பை காவல்துறையும் விநாயகர் சதுர்த்தியையொட்டி எந்தவகையான கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது.
வியாழன் நள்ளிரவு முதல் செப்டம்பர் 19 வரை 10 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் ஒன்றாகக் கூடக் கூடாது என்றும், இதை மீறினால் அரசு உத்தரவை மீறியதாகக் கூறி வழக்குப் பதியப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இணையவழியில் விநாயகரை வழிபடும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
Comments