வரிவிலக்கு என்பது சலுகை மட்டுமே உரிமையாக கோர முடியாது - உயர்நீதிமன்றம்
நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும் மேம்படுத்துவதற்காக தான் வரிவிலக்கு இருக்க வேண்டுமே தவிர, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பான மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு இந்திய இசை கருவிகளுக்கு வரிவிலக்கு அளிப்பது போல், மின்னனு முறையில் உற்பத்தியாகும் தங்கள் நிறுவன இசைக் கருவிகளுக்கு வரி விலக்கு வழங்க வேண்டும் என ராடெல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், தலைமுறை தலைமுறையாக இந்திய இசைக்கருவிகளை தயாரிக்கும், ஏழ்மை கலைஞர்களை ஊக்குவிக்கவே வரிவிலக்கு வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரிவிலக்கு கோரிய நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் வரிவிலக்கு என்பது சலுகை மட்டுமே என்றும், விதிகளுக்கு உட்பட்டு அளிக்கப்படும் அந்த சலுகையை உரிமையாக கோரமுடியாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments