மறைந்த புலவர் புலமைப்பித்தனின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்

0 2193
மறைந்த புலவர் புலமைப்பித்தனின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்

மறைந்த அதிமுக முன்னாள் அவைத் தலைவரும் பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியருமான புலமைப்பித்தனின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

86 வயதான புலமைப்பித்தன் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதித்து கடந்த 1ஆம் தேதி அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணியில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இன்று பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இன்று காலை புலமைப்பித்தனின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments