சென்னை டி.டி.கே சாலையில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் திடீரென ஐந்தடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தை சுற்றி உடனடியாகத் தடுப்புகளை அமைத்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அருகே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்த அதிகாரிகள் பள்ளம் உடனடியாக சீரமைக்கப்படும் என்றனர்.
Comments