வரிசையில் நிற்காமல் வந்த இளைஞன், தட்டிக் கேட்ட பெண்ணை ஆவேசமாகத் தாக்கும் காட்சி
பெங்களூருவிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் ஒருவரை இளைஞன் ஒருவன் சரமாரியாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மைகோ லேஅவுட் பகுதியிலுள்ள அந்த பல்பொருள் அங்காடி கவுண்ட்டரில் கடந்த 5ஆம் தேதி வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று தாங்கள் வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது வரிசையைத் தவிர்த்துவிட்டு முன்னால் வந்த அசோக்குமார் என்ற இளைஞன், தனது பொருளுக்கு பில் போட முயன்றுள்ளான். அதனைத் தட்டிக்கேட்ட லாவண்யா என்ற பெண், தனது ஐபோனில் அவனை வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த அசோக்குமார், ஐபோனை தட்டிவிட்டு, அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளான். பிறகு அவரது தலைமுடியைப் பற்றி இழுத்து கீழே தள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பான புகாரில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, பெண்ணைத் தாக்கிய அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Comments