விநாயகர் சதுர்த்திக்கு அரசு தடை விதிக்கவில்லை ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

0 4196
விநாயகர் சதுர்த்திக்கு அரசு தடை விதிக்கவில்லை என முதலமைச்சர் விளக்கம்

விநாயகர் சதுர்த்திக்குத் தடைவிதிக்கவில்லை எனவும், அவரவர் வீடுகளில் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை விதித்துள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.

அதற்கு விளக்கமளித்த முதலமைச்சர், விநாயகர் சதுர்த்தி கொண்டாடக் கூடாது என அரசு சொல்லவில்லை எனவும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தான் விநாயகர் சதுர்த்திக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தார். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடிக் கொண்டாட, ஒன்று கூடி ஊர்வலமாகச் செல்ல மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments