பஞ்ச்ஷிரின் 60 சதவிகிதம் பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது ; தேசிய எதிர்ப்பு படை தலைவர் அலி நசாரி
தாலிபன்கள் தாக்கியபோது, பின்வாங்குவது என்ற தந்திரபூர்வமான முடிவை தாங்கள் எடுத்ததாகவும், மீண்டும் தாலிபன்களை எதிர்த்து போர் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ள தேசிய எதிர்ப்பு படையினர், பஞ்ச்ஷிர் மாகாணத்தை தாங்கள் இழந்து விட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளனர்.
பஞ்ச்ஷிரின் புவியியல் அமைப்பு மிகவும் சிக்கலானது என்பதால் அதை முழுவதுமாக ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்ற முடியாது என தேசிய எதிர்ப்பு படை தலைவர் அலி நசாரி தெரிவித்துள்ளார். பஞ்ச்ஷிரில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்கள் இன்னும் தங்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றும் CNN-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
பஞ்ச்ஷிரை பிடிக்க வந்த தாலிபன்களுக்கு கடுமையான உயிர்சேதங்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், மாகாண அலுவலகம், பிரதான சாலை ஆகியவற்றை மட்டுமே தாலிபன்கள் பிடித்ததாகவும், அதனால் அங்கு அவர்கள் தங்களது கொடியை ஏற்றினார்கள் என்றும் அலி நசாரி விளக்கம் அளித்துள்ளார்.
Comments