தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி - அமைச்சர் பொன்முடி
தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பிளஸ் டூ மாணவர்கள் All pass என அறிவிக்கப்பட்டதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது.
இதை அடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் வரை மாணவர் சேர்க்கையை உயர்த்தி கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் கடந்த ஆண்டே 10 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதனை 15 சதவிகிதமாக உயர்த்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொன்முடி தெரிவித்தார்.
Comments