ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நினைப்பவர்களை அனுமதிக்க வேண்டும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென்
வெளிநாட்டவர், விசா வைத்திருப்போர், ஆப்கான் குடிமக்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பினால் அவர்களை தாலிபன் அரசு தடுக்கக் கூடாது என்று அமெரிக்க வெளியுறவுஅமைச்சர் பிளிங்கென் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தாலிபன்கள் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.இதற்காக காபூல் விமான நிலையத்தில் வர்த்தக ரீதியான விமான சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மிகுந்த கவனத்துடன் தாலிபனின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாகவும் அமெரிக்கா மீது தாக்குதல் தொடுத்தால் அமெரிக்கா திருப்பித் தாக்குதல் நடத்த தயங்காது என்றும் பிளிங்கென் குறிப்பிட்டுள்ளார்.
Comments