தமிழகத்தில் இருந்து 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல்

0 3318

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்  அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவை எம்பிக்களாக இருந்த அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். அதனால் ஏற்பட்ட 2 காலியிடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் 22 ஆம் தேதி கடைசி நாளாகும், செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி செப்டம்பர் 27 ஆம் தேதியாகும். அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்தலில் தமிழ்நாட்டு எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments