கீழடி என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3136

 

ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலியில் 15 கோடி ரூபாயில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். கரிமப் பகுப்பாய்வு  முடிவுகளின்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாகச் சங்ககாலத் தமிழர்கள் விளங்கினர் என்பதையும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது என்பதையும் முதலமைச்சர் அறிவித்தார். திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி உலகெங்கும் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments