முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் தலைமையில் இந்திய பாதுகாப்பு படைகளின் கூட்டு நடவடிக்கை

0 2941

முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் தலைமையில் இந்திய பாதுகாப்பு படைகளின் கூட்டு நடவடிக்கை அடுத்த 2 அல்லது 3  ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

எதிர்காலப் போர்களை நடத்துவதற்கு முப்படைகளில் வான் மற்றும் கடல் வழி பாதுகாப்பு படைகளின் 5 கூட்டுக் குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட உயர் அதிகாரிகள் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

இதற்காக எட்டு பேர் கொண்ட குழுவை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் நியமித்துள்ளது. விரைவான நடவடிக்கைகளை எடுக்க இந்திய விமானப்படையும் கடற்படையும் இத்திட்டத்தில் இணைய உள்ளன. ராணுவத்திற்கு உள்ள பல்வேறு சவால்களையடுத்து அது இத்திட்டத்தில் இணைக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments