பெண் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன், லாரி மீது மோதிய விபத்து... 4 பெண்கள் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தத்தில், பெண் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் மற்றும் தண்ணீர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள பூக்கள் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றுக்கொண்டிருந்தது.
சில்லாநத்தம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, வேனும் எதிரே வந்து தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதின.
ஓட்டுநர் பாபு அதிவேகமாக வேனை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், வேனில் பயணித்த 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments