தாமதமாக சென்ற ரயிலால் விமானத்தை தவற விட்ட பயணிக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவு
ரயில் தாதமாகச் சென்றதால் விமானத்தைப் பிடிக்க முடியாமல் விட்ட பயணிக்கு முப்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வேத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீரில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு ரயில் 4 மணி நேரம் தாமதாகச் சென்றதால் விமானத்தைத் தவறவிட்டவர் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.
பயணியரின் நேரம் விலைமதிப்பற்றது என்றும், ரயில் தாமதமாக இயக்கப்படுவதற்கு ரயில்வே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சேவையில் குறைபாடுள்ளதாகப் பயணி புகார் அளித்தால் அதற்கு இழப்பீடு வழங்க ரயில்வேக்குப் பொறுப்புள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பொதுப்போக்குவரத்து அமைப்புத் தொடர்ந்து நீடிக்க வேண்டுமெனில் தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் செயல்பாட்டை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments