வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விவகாரம் ; தனி நீதிபதியின் உத்தரவுக்கு 2 நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை
வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், வளையகாரனூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியிடம், கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி, தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நிராகரித்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
Comments