குடியரசு தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்துப் பேசினார். பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமான சண்டிகரின் நிர்வாகப் பொறுப்பும் பன்வாரிலால் புரோகித்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை செவ்வாயன்று சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார்.
Comments