ஹோட்டலை அடித்து நொறுக்கிய போலீசார் ; ஆஃப் பாயில் கொண்டு வர தாமதமானதால் ஆத்திரம்

0 4336
போதையில் ஹோட்டலை அடித்து நொறுக்கியதாக புகார்

தஞ்சாவூரில், ‘ஆஃப் பாயில்’, வர தாமதமானதால், போதையில் ஹோட்டலை அடித்து நொறுக்கி சூறையாடிய, போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில், ராம்குமார் என்பவர் நடத்தி வரும் ஹோட்டலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காவலர்கள் பாலசுப்ரமணியன், அருண்குமார், அவர்களது நண்பர் விஜி ஆகியோர் அங்கிருந்த சேர்களை எடுத்து வீசி, அடித்து நொறுக்கி மோதலில் ஈடுபட்டதால் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. பாலசுப்பரமணியன், அருண்குமார் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக தகவறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, காவலர்கள் பாலசுப்ரமணியன், அருண் குமார் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள எலக்ட்ரிசியன் விஜியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments