மின்சாரக் கார் தயாரிக்கும் முயற்சியில் டொயோட்டா நிறுவனம் ; திடநிலை பேட்டரியைத் தயாரிக்கும் முயற்சியில் தீவிரம்
மின்சாரக் கார் தயாரிப்பதற்கான முயற்சியில் ஜப்பானின் டொயோட்டா நிறுவனமும் இறங்கியுள்ளது. அந்த நிறுவனம் மின்சாரக் காருக்கான பேட்டரியைக் குறைந்த செலவில் தயாரிக்க ஒரு இலட்சத்து மூவாயிரம் கோடி ரூபாயைச் செலவிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதில் 66 ஆயிரத்து 200 கோடி ரூபாயை பேட்டரி தயாரிப்புக்கும், மீதியை ஆராய்ச்சிக்கும் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பத்தாண்டின் இரண்டாவது பாதியில் பேட்டரி தயாரிப்புக்காகும் செலவைப் பாதியாகக் குறைக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்குள் திடநிலை பேட்டரிகளைத் தயாரிக்கவும், பத்தாண்டுகள் கழித்தும் அதன் சார்ஜிங் திறனில் 90 விழுக்காட்டைத் தக்க வைக்கும் அளவில் பேட்டரியைத் தயாரிக்கவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக டொயோட்டா முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரி தெரிவித்துள்ளார்.
Comments