கேரளாவில் நிபா வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை ; அரசு மருத்துவமனையில் 68 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

0 3581
அரசு மருத்துவமனையில் 68 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோழிகோட்டில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள், புனேவிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ஏற்கனவே 10 பேருக்கு நெகட்டிவ் என்று தெரியவந்த நிலையில், மேலும் 20 பேருக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments