யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரும் மனு - 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 3837
8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரும் மனுவை, 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பொதுநல மனு விசாரணைக்கு வந்தபோது, அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் இத்தேர்வுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பதால், அலுவல் மொழியான ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் புதிதாக கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றும், அதனை 8 வாரத்திற்குள் பரீசிலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments