பாராலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு ரூ.6 கோடி பரிசு - ஒடிசா அரசு

0 3977
பிரமோத் பகத்திற்கு ரூ.6 கோடி பரிசு என ஒடிசா அரசு அறிவிப்பு

பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒடிசாவை சேர்ந்த பிரமோத் பகத்திற்கு 6 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது. டோக்யோவில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் இறுதிப் போட்டியில் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார்.

முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஏற்கனவே அறிவித்தபடி, பிரமோத் பகத்திற்கு 6 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அத்துடன், குரூப் ஏ பிரிவில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments