கொடநாடு வழக்கு-குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வாகனம் வழங்கிய இருவரிடம் விசாரணை

0 2905

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதகையில் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் உட்பட 10 பேரின் உறவினர்கள், மற்றும் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவருரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்த நவ்ஷத், இடைத்தரகர் நஃபுல் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments