டீசல் திருடியதாக கூறி ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல், போலீசார் விசாரணை
சேலத்தில், டீசல் திருடியதாக கூறி ஆட்டோ ஓட்டுநரை கயிற்றால் சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரகவுண்டர்தெரு பகுதியை சேர்ந்த ப்ரித்தி என்பவர் அன்னதானபட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் என்பவருக்கு சொந்தமான மினி ஆட்டோவை ஓட்டி வந்தார்.
இந்த நிலையில், ப்ரித்தி கடந்த ஒரு வாரமாக ஆட்டோவில் இருந்து 30 லிட்டர் டீசலை திருடி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் ப்ரித்தியை மணியனூரில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ உரிமையாளரின் நண்பர்கள், அவரை கயிற்றால் கடுமையாக தாக்கினார்.
Comments