காரிலிருந்து பெண்ணின் சடலம் தூக்கிவீசப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம்- பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த தகவல்கள்!
கோவையில், காரிலிருந்து பெண்ணின் சடலம் தூக்கிவீசப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், அந்த பெண் கொலை செய்யப்படவில்லை என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே சாலையில் கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தியதில் எஸ்யுவி காரில் இருந்து பெண் சடலம் விழுவது போல் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
ஆனால் பிரேத பரிசோதனையில் பெண் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரம் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பெண் மன நலம் பாதிப்பக்கட்டவராகவும், விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில், சிசிடிவியில் பதிவான குறிப்பிட்ட காரை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் திருவள்ளூர் விரைந்துள்ளனர்.
மேலும், காருக்கு பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுநரையும் விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Comments