ஈஷாவின் காவேரி கூக்குரல் மரம் வளர்ப்புத் திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் மரம்வளர்ப்புத் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவைக் கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஈஷா அறக்கட்டளை பொதுமக்களிடம் இருந்து பெருமளவில் நன்கொடை திரட்டியுள்ளதாகவும், அரசின் நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படுவதாகவும் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் நோக்கம் அற்பமானது எனக் கூறியுள்ளதுடன், ஈஷாவின் செயலையும் பாராட்டியுள்ளது. இது அரசின் திட்டமில்லை என்றும், அரசு நிலத்திலோ, பொதுநிலத்திலோ மரக்கன்றுகள் நடப்படவில்லை என்றும் கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளதாகவும், அதனால் இந்தத் திட்டத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய கேள்வி எழவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இப்போதைய சூழலில் மரம் வளர்ப்புத் திட்டம் மிகத் தேவையானது எனக் கருதுவதாகத் தெரிவித்ததுடன் மனுவைத் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Comments