போதைப் பொருள் வழக்கு... நடிகர் ராணாவிடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை

0 2544

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், போதை பொருள் வழக்கு தொடர்பாக ஆஜரான பாகுபலி நடிகர் ராணாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் ராணா, நவ்தீப், ரவிதேஜா உள்ளிட்ட 12 பேர் போதை பொருள் விவகாரத்தில் சிக்கினர்.

இதில் பண மோசடியும் நடைபெற்றதாக தகவல் வெளியானதையடுத்து, இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகைகள் சார்மி, ரகுல் பிரீத் சிங் ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகர் ராணா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments